Freedom convoy: தகிக்கும் கனடா.. அமெரிக்க எல்லை முடக்கம்.. ஸ்தம்பித்தது போக்குவரத்து!

கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அங்கு நடந்து வரும் லாரி டிரைவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம் போல இந்த போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது. லாரி டிரைவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் கனடா – அமெரிக்க எல்லையை … Read more

புதிய தொற்று மாறுபாடுகளை தடுக்கும் சக்தி கொரோனா தடுப்பூசிகளுக்கு இல்லை- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகள் புதிதாக பரவி மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் புதிய தொற்று மாறுபாடுகள் வெளிவருவதைத் தடுக்காது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் சாரா எல் கேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆராய்ச்சியின் முடிவில் … Read more

Johnson & Johnson: ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மீது உலக அளவில் தடை விரைவில்?

பிரிட்டனின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் (Johnson & Johnson) பேபி பவுடர் விற்பனை உலகம் முழுவதும் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது, அந்நிறுவனம் ஏற்கனவே 2020ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டது. புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை – அரசு அதிரடி!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் … Read more

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை புது மைல்கல் <!– பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை பு… –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆயிரத்து 500 மீட்டர் ஸ்கேடிங் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ஐரீன் வுஸ்ட் தங்கம் வென்றார். 1 நிமிடம் 53 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒலிம்பிக் சாதனை படைத்த ஐரீன், 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் மொத்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் 5 பதக்கங்களுக்கு மேல் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அதேபோல் மகளிருக்கான பனிச்சறுக்கு slalom போட்டியில் சுவீடன் வீராங்கனை சாரா ஹெக்டேர் தங்கம் … Read more

ரஷியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கொரோனா

மாஸ்கோ : ஒமைக்ரான் தாக்கத்தால் ரஷியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று உறுதி … Read more

Oldest Pub Closed: 1000 ஆண்டுகள் பழமையான பப் மூடப்பட்டது! காரணம் இதுதான்…

லண்டன்: கொரோனா பாதிப்பால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பிரிட்டனின் மிகவும் பழமையான பப்பையும் கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. பொருளாதார சவால்கள் காரணமாக ஆயிரம் ஆண்டு பழமையான பப் மூடப்பட்டதாக  அதன் உரிமையாளர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, பிரிட்டனின் பழமையான பப் பூட்டப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக அனைவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்கின்றனர். நிதி பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை, கொரோனாவின் தாக்கத்தின் ஆயிரக்கணக்கான சீரழிவுகளில் ஒன்றாகும்.  லண்டனின் வடக்கே … Read more

அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கிய செல்லப்பிராணி பத்திரமாக மீட்பு <!– அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் ச… –>

அமெரிக்காவின் coloroda மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த காரில் புகை மூட்டத்தில் சிக்கி தவித்த நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. Douglas County யில் அமைந்துள்ள சாலை ஒன்றில் கார் ஒன்று கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து காரின் உரிமையாளர் உடனடியாக இறங்கி விட்ட நிலையில் காரில் இருக்கும் தன்னுடைய செல்லப்பிராணியை காப்பாற்றும்படி கதறினார். அப்போது அந்த வழியாக வந்த துணை ஷெரீப் உடனடியாக விரைந்து சென்று காரின் கண்ணாடிகளை தடியால் உடைத்து நாயைப் … Read more

தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய டிரக் டிரைவர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் சிறார்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வழி என பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு … Read more

குடியேற்ற முகாமில் 56 இந்திய மீனவர்கள்| Dinamalar

கொழும்பு : இலங்கையில், நீதிமன்றம் விடுவித்த இந்திய மீனவர்கள், 56 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததை அடுத்து, கொழும்பு குடியேற்ற முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிச.,ல் இந்திய மீனவர்கள், 56 பேர் இலங்கை மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்; அவர்களின், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த ஜன., … Read more