எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை:தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்படி எம்.பி.ஏ. – எம்.சி.ஏ. – எம்.எஸ்சி. ஆகிய முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.ஏ. படிப்பில் பொது மேலாண்மை தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதல் மனிதவளம் நிதி சேவை மருத்துவ சேவை சுற்றுலா மற்றும் இயக்க மேலாண்மை என எட்டு வகை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் … Read more

ரஷிய விமானப்படை தாக்குதல்! கார்கிவ் நகரில் பொதுமக்கள் 8 பேர் பலி!!

கீவ், ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் கீவ் நகரில்  உள்ள உளவுத்துறை அலுவலகங்களுக்கு அருகேயுள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.  இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷிய விமான படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் … Read more

உடனடியாக போர் நிறுத்தம்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

ஜெனீவா: உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. அதன்படி ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய … Read more

நாயை விட்டு.. மெர்க்கலை "மிரட்டிய" புடின்.. பயங்கர சேட்டைக்கார ஆளு!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் எந்த அளவுக்கு குசும்புக்காரர் என்றார், ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்க்கலை ஒரு முறை நாயை விட்டு “மிரட்டிய” சம்பவத்தை நினைவு கூறலாம். புடினுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்ப இஷ்டம். குதிரை சவாரி செய்வது, வேட்டை நாயுடன் விளையாடுவது, சிறுத்தையுடன் கொஞ்சிக் குலாவுவது என்று விதம் விதமாக அவரது பொழுது போக்குகள் இருக்கும். ஆனால் இதற்கு நேர் மாறானவர் ஏஞ்செலா மெர்க்கல் . அவருக்கு நாய் என்றாலே ஆகாது, அலர்ஜி. நாயைக் கண்டாலே … Read more

உக்ரைன் இந்தியர்களுடன் போலந்தில் இருந்து முதல் விமானம் டெல்லி புறப்பட்டது

வார்சா: ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் உள்ள எஞ்சியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நான்கு மத்திய மந்திகளை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக அனுப்பியுள்ளார்.  இதன்படி, மத்திய மந்திரி வி.கே.சிங் போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்த அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார். போலந்து … Read more

ஆத்தங்குடியில் மஞ்சு விரட்டு| Dinamalar

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள ஆத் : ங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 126 மாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய 100 மாடுகள் தொழுவில் அவிழ்த்து விடப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. … Read more

உக்ரைன் கீவில் உள்ள டிவி கோபுரத்தின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு … Read more

6-வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை

கீவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெறுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை … Read more

'எங்கள ஒன்னும் பண்ண முடியாது!' – கெத்து காட்டும் உக்ரைன் அதிபர்!

எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. … Read more

ரஷ்ய ஊடகங்கள் வெளியிடும் டிவிட்டர் பதிவுகளுக்கு 'flag' குறியீடு.. போர் தொடர்பாக வெளியாகும் வதந்தி, தவறான தகவல்களை கட்டுப்படுத்த முயற்சி.! <!– ரஷ்ய ஊடகங்கள் வெளியிடும் டிவிட்டர் பதிவுகளுக்கு 'flag' கு… –>

ரஷ்ய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் டிவிட்டர் தளத்தில் வெளியிடும் தகவல்கள் Flag குறியீட்டுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் எங்கிருந்து ஆரம்பமானது என்பது குறித்த தகவலை இந்த flag குறியீடு பார்வையாளர்களுக்கு சுட்டிக்காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர் தொடர்பாக பகிரப்படும் வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யப்படும் என டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து … Read more