உணவு பொருட்கள் வாங்க கடையில் நீண்ட வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட கர்நாடக மாணவர்

உக்ரைனில் ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் மிகப்பெரிய 2-வது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெருக்களில் வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். ராக்கெட் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று கார்கீவ் நகரில் உள்ள முக்கியமான அரசு கட்டிடம் அருகில் பதுங்கி இருந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா குண்டுவீச்சுக்கு பலியாகியுள்ளார். நவீன் சேகரப்பா கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கார்கீவ் தேசிய … Read more

போர் குற்றங்களில் ஈடுபட்டதா ரஷ்ய ராணுவம்? சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை| Dinamalar

கார்கிவ்: போர் குற்றங்களில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்ய ராணுவத்தின் மனித உரிமை மீறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்ய ராணுவம் மிகப்பெரிய மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் கரிம் கான் ஐசிசி நீதிபதிகளிடம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக உக்ரைன் … Read more

"எங்களுடன் நீங்கள் துணை நிற்பதை நிரூபியுங்கள்" – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஆவேச உரை

“உங்களுடன் சமமாக உயிர் வாழ்வதற்காக, எங்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்களும் உங்களைப் போல தான் இருக்கிறோம்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை கவனம் ஈர்த்து வருகிறது. ரஷ்ய ராணுவ நடவடிக்கை 6-வது நாளாக தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், “கார்கிவ் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம். கார்கிவ் மத்திய சதுக்கத்தில் … Read more

உக்ரைன் -ரஷியா போரால் எத்தனை கோடி பேருக்கு பாதிப்பு? -ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் தமது சொல் பேச்சை கேட்காததால் ஆத்திரமடைந்து அந்நாட்டின் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும் இந்த போரை நிறுத்தவதற்காக உக்ரைன் -ரஷியா இடையே பெலராசில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா ரவுண்ட் கட்டி அடித்து வருகிறது. இருநாட்டு … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை நெருங்கும் ரஷ்ய படைகளால் அதனை சுற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க உக்ரைன் வேண்டுகோள்.! <!– ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை நெருங்கும் ரஷ்ய… –>

உக்ரைனின் சாபோரிஸியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை ரஷ்யா நெருங்கும் நிலையில், அந்நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை சுற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள அணு மின் நிலையங்களில் சுமார் 15 அணு உலைகள் உள்ள நிலையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைனின் … Read more

உக்ரைன்- ரஷியா இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

உக்ரைன்-  ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.  உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் … Read more

உக்ரைன் மீதான போர் தொடரும்: ரஷ்யா| Dinamalar

கீவ்: உக்ரைன் மீதான போர் தொடரும், பின்வாங்க போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸ் நாட்டில் நேற்று (பிப்.,28) நடந்த உக்ரைன் – ரஷ்யா பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கார்கிவ் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்தார். இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை … Read more

Breaking: உக்ரைன்: ரஷ்ய குண்டுவீச்சில் இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக ஏன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன்பிறகு அந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில், மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான புகலிடங்களுக்கு சென்ற வண்ணம் … Read more

குண்டு வீச்சில் பலியான மருத்துவ மாணவர் நவீன்: உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது சோகம்

புதுடெல்லி: உக்ரைனில் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அதுபோலவே தலைநகர் கீவ் நகரிலும் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் … Read more

மொட்டை மாடியில் "X" மார்க்.. குறி வைத்து அடிக்கும் ரஷ்யா.. அலறும் உக்ரைன்!

கீவ் நகரில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களை போட்டு அதை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரைன் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. தங்களது கட்டடங்களின் மாடியில் எக்ஸ் மார்க் போடப்பட்டிருந்தால் உடனடியாக அதை அழிக்குமாறும் மக்களை அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுபோன்ற குறியீடுகள் போடப்பட்டுள்ள கட்டடங்களை குறி வைத்து ரஷ்யப் படையினர் குண்டு வீசித் தாக்குவதாகவும் உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. X குறியீடு மட்டுமல்லாமல், வில் அம்பு குறியீட்டையும் சில இடங்களில் பார்க்க … Read more