குண்டு வீச்சில் பலியான மருத்துவ மாணவர் நவீன்: உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது சோகம்

புதுடெல்லி: உக்ரைனில் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அதுபோலவே தலைநகர் கீவ் நகரிலும் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் … Read more

மொட்டை மாடியில் "X" மார்க்.. குறி வைத்து அடிக்கும் ரஷ்யா.. அலறும் உக்ரைன்!

கீவ் நகரில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களை போட்டு அதை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரைன் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. தங்களது கட்டடங்களின் மாடியில் எக்ஸ் மார்க் போடப்பட்டிருந்தால் உடனடியாக அதை அழிக்குமாறும் மக்களை அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுபோன்ற குறியீடுகள் போடப்பட்டுள்ள கட்டடங்களை குறி வைத்து ரஷ்யப் படையினர் குண்டு வீசித் தாக்குவதாகவும் உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. X குறியீடு மட்டுமல்லாமல், வில் அம்பு குறியீட்டையும் சில இடங்களில் பார்க்க … Read more

உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புகளில் போடப்பட்டிருக்கும் சிவப்பு நிற குறியீட்டால் மக்கள் அச்சம்.. குறியீடுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிடுமாறு அரசு வேண்டுகோள் <!– உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புகளில் போடப்பட்டிருக்கும… –>

உக்ரைனில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குறியீடு போடப்பட்டிருக்கும் நிலையில், அது தாக்குதலுக்கு குறி வைத்து ரஷ்யா போட்ட குறியீடாக இருக்கலாம் எனவும், அதனை உடனடியாக அழித்துவிடுமாறும் மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சிவப்பு நிறத்தில் குறியீடு போடப்பட்டுள்ளது. இந்த குறியீடு ரஷிய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் எனவும், குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து … Read more

நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, ‘‘நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட … Read more

எங்களை யாராலும் வீழ்த்த முடியாது: உக்ரைன் அதிபர்| Dinamalar

கீவ்: உக்ரைனை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் எனவும் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பிய பார்லிமென்டில் உரையாற்றியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்று காலையிலிருந்தே தீவிரப்படுத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ஏவுகணை தாக்குதலிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. குடியிருப்பு பகுதியிலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய … Read more

உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?

ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது.  தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின் படி, தங்கள் நாட்டு முக்கிய கட்டுமானங்களையும் மக்களையும் தாக்க, ரஷ்யா வேக்குவம் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் திங்களன்று இதை தெரிவித்தார்.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், நடந்து வரும் மோதலில் ரஷ்யா வேக்குவம் வெடிகுண்டு … Read more

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளவின் 26 வயது மகன் மறைவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளவின் மகன் ஜைன் நாதெள்ள மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26. சிரிபல் பால்சி என்னும் (மூளைச் சேதம், கை கால் முடக்கம்) நோயால் பாதிக்கப்பட்ட ஜைன் நேற்று உயிரிழந்தார்.இந்தத் துக்கச் செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தனது ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளது. அதில், ”சத்யா நாதெள்ள குடும்பத்தோடு துக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். அதேசமயம் நாதெள்ள குடும்பம் தங்கள் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதியுங்கள்” … Read more

பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டே உக்ரைன் அதிபருக்கு புதின் இழைத்த துரோகம்!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ரஷியா, கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது உக்கிரமாக தொடர் தாக்கல் நடத்தி வருகிறது. குண்டுமழை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதல் நடத்திவரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை சின்னாபின்னம் ஆக்கி வருகின்றன. இன்னும் ஒரு சில நாளில் ரஷிய படைகள் கீவ்வை கைப்பற்றிவிடும் என்று சொல்லும் அளவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் … Read more

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள 3 நாடுகள்.! <!– உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள 3 நாடுகள்.! –>

பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய நாடுகள் தங்களுக்கு 70 போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்று நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. பல்கேரியா 30 விமானங்களையும், போலந்து 28 விமானங்களையும், சுலோவாக்கியா 12 விமானங்களையும் வழங்குகின்றன. … Read more

எனக்கு பயமாக இருக்கிறது..! உக்ரைனில் கொல்லப்படுவதற்கு முன், ரஷிய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய மெசேஜ்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.   இதுகுறித்து ஐ.நாவுக்கான உக்ரைன் … Read more