20 செகன்ட்ஸ்தான்.. 40 ராக்கெட்கள் பாயும்.. அந்த இடமே சர்வ நாசம்.. அதிர வைக்கும் ரஷ்யா !

கீவ் நகரிலும், கர்கீவ் நகரிலும் ரஷ்யா நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதி நவீன பிஎம் 21 ரக ஏவுகணை லாஞ்சர் மூலம் ரஷ்யா அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இப்படி ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா தற்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தி வருவது பிஎம் 21 ரக ராக்கெட் லாஞ்சர்கள்தான். இதிலிருந்து 20 விநாடிகளில் … Read more

உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடத்தில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் <!– உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடத… –>

ரஷ்ய தாக்குதலில் 5 பேர் பலி – பலர் படுகாயம் கார்கிவ் நகரில் ரஷ்ய வான் தாக்குதலில் உயிர்பலி மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என பேரச்சம் உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் அரசு கட்டிடம் ஒன்றில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் கார்கிவ் நகரின் கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 5 பேர் பலி – ஏராளமானோர் படுகாயம் வான் தாக்குதலில் கட்டிடம் பலத்த சேதமடைந்திருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் … Read more

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் காலமானார்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழந்தார். 26 வயதாகும் ஜெயின் நாதெல்லா பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது.  இதுகுறித்து, தனது மகனின் நிலையை பார்த்து தான் அவரை போன்று … Read more

கீவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை| Dinamalar

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான நமது தூதரகம் அறிவறுத்தி உள்ளது. உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், அவ்வபோது, … Read more

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் ஜைன் நாதெல்லா காலமானார்

மைக்ரோசாப்ட் தலைமை  செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லாவின் (Satya Nadella) மகன் ஜைன் நாதெல்லா (Zain Nadella) திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 26. அறிக்கைகளின்படி, ஜெயின் பெருமூளை வாதம் என்னும் இந்த குறைபாடு  இருந்தது. பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படும் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோயினால் பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது. சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜெயின் இறந்துவிட்ட தக்வல் குறிப்பிடப்பட்டுள்ளது. ” இறந்தவரது குடும்பத்தை மன … Read more

கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் ரஷ்யா: தவிக்கும் இந்திய மாணவர்கள்; மத்திய அரசு கவலை

கீவ்: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு இந்திய மாணவர்கள் 2,500 பேர் சிக்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் … Read more

கீவ் நகரில் "வெயிட்டிங் மோட்".. வட மேற்கில் அதிரடி.. தெற்கே தெறி வேகம்.. திணறும் உக்ரைன்

உக்ரைன் நாட்டு மீதான போரை ரஷ்யா குறைப்பதாக தெரியவில்லை. ஆங்காங்கே சற்று நிதானம் காப்பது போல தெரிந்தாலும் திட்டமிட்டு உக்ரைன் சுற்றி வளைத்து அபகரித்துக் கொண்டிருக்கிறது ரஷ்ய ராணுவம் . மிக மிக தெளிவாக திட்டம் போட்டு படு சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறது ரஷ்யா. உலக நாடுகளின் கண்டனங்களும், பொருளாதார தடைகளும், மிரட்டல்களும், கோரிக்கைகளும் அதன் காதில் விழவில்லை. மாறாக தனது திட்டத்தை மிக நேர்த்தியாக அது செயல்படுத்தி வருகிறது. தற்போது சில பகுதிகளில் ரஷ்யா … Read more

ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு <!– ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல் செயலிகளை Windows App Store-ல் இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. Facebook மற்றும் Youtube தொடர்ந்து Google நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது. Source link

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்

கீவ்: நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. … Read more

பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு| Dinamalar

லீவ் : ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது. அதையடுத்து, லீவ் நகரில் உள்ள ‘பீர்’ தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது.காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக … Read more