எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. மேலும் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை தாக்கினால் கடும் … Read more

ஓமிக்ரான் எலியிலிருந்து வந்ததா? சீன விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் பகீர் தகவல்கள்

ஓமிக்ரான் குறித்து சீன விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். ஒரு புதிய ஆய்வின்படி, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு எலிகளிலிருந்து தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது எங்கள் கூட்டாளர் வலைத்தளமான WION இன் அறிக்கையின்படி, இந்த ஆய்வை சீன (China) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னர் பல பிறழ்வுகளைக் கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு வந்தது என்பது குறிப்பட்டுள்ளது. … Read more

உச்சத்தில் கரோனா | அமெரிக்க நிலைமை 5 வாரங்களில் சீரடையும்: மருத்துவ நிபுணர்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கரோனா தீவிரமாக பரவும் நிலையில், 5 வாரங்களில் நிலைமை சீரடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், டுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே ஒமைக்ரான் அதிகளவில் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. முந்தைய டெல்டா வைரஸ் குறைந்து இதன் பரவல் மேலோங்கி வருகிறது என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, முற்றிலுமாகவே … Read more

மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. மீட்கும் பணி தீவிரம்..! <!– மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்….. –>

மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்து 104 அடி ஆழத்தில் 4 நாளாகச் சிக்கியுள்ள 5 வயதுச் சிறுவனை மீட்பதற்காக, அதன் அருகே ஆழமான குழியைத் தோண்டியுள்ள மீட்புக் குழுவினர் சிறுவனை நெருங்கியுள்ளனர். 25 சென்டிமீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் சிறுவன் ராயன் தவறி விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கேமராவைச் செலுத்திப் பார்த்தபோது சிறுவன் தலையில் இலேசான காயமடைந்திருப்பதும், தன்னுணர்வுடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆக்சிஜன் குழாய், உணவு, … Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக உயரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு திடீரென்று லட்சக்கணக்காக அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் 9 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு மாத காலத்தில் … Read more

இந்தியாவுக்கு எதிரான சதிகளை முடுக்கிவிட்டுள்ளது பாகிஸ்தான்: அமெரிக்க அறிக்கை

வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு நெருக்கடி என பாகிஸ்தான் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமைதியை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த நாடு மீண்டும் சதி செய்ய ஆரம்பித்துள்ளது.  இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. அமைதியைக் குலைக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான ஜிஹாதி நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் இப்போது … Read more

எதிர்ப்புக்கு பணிந்த அமெரிக்க நிறுவனம்: நெல்சன் மண்டேலா இருந்த சிறைச்சாவி ஏலம் நிறுத்தம்

நியூயார்க்: நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறையினுடைய சாவியின் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இந்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் கர்ன்சேஸ் (Guernsey’s) என்கிற ஏல நிறுவனம், வரும் 28ம் தேதி மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவி … Read more

பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர… –>

பெரு நாட்டில் பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பிரபல தொல்பொருள் ஆய்வு  தலமான Nazca Lines பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் டச்சு நாட்டினர் என்றும், 2பேர் சிலி நாட்டினர் என்றும் 2பேர் பெரு நாட்டினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் கூறும் போது செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான … Read more

கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த 410 பவுண்ட் தங்கக்கட்டியை பூங்காவில் வைத்த நபர்

வாஷிங்டன்: தங்கம் விற்கிற விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிக்லஸ் காஸ்டெல்லோ (43) என்ற கலைஞர் ஒரு தங்க கன சதுரத்தை வடிமமைத்துள்ளார். இவர் காஸ்டெல்லோ காயின் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்துவதற்காக இந்த தங்க கன சதுரத்தை உருவாக்கியுள்ளார். இந்த தங்கக்கட்டியை சுமார் 410 பவுண்டு எடையில் 24 கேரட் … Read more