ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு <!– ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல் செயலிகளை Windows App Store-ல் இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. Facebook மற்றும் Youtube தொடர்ந்து Google நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது. Source link

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்

கீவ்: நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. … Read more

பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு| Dinamalar

லீவ் : ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது. அதையடுத்து, லீவ் நகரில் உள்ள ‘பீர்’ தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது.காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக … Read more

Russia Ukraine Crisis: ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா – உக்ரைன் புகார்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யாவின் அடாவடி தாக்குதல் பற்றி குற்றம் சாட்டுகிறார். மேலும், மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யாவின் மீது மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. . திங்களன்று உக்ரேனியர்களை வெடிபொருட்கள் மற்றும் வேக்குவம் குண்டுகளால் தாக்கியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்று சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் (Amnesty International and Human … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் மட்டுமல்ல… – நடுநிலைமைக்கு மறுபெயர் இந்தியா!

கடந்த 20-ம் நூற்றாண்டில் வியட்நாம், லாவோஸ், கியூபா, லெபனான், லிபியா, பனாமா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 21-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக்கை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் எந்தவொரு நாட்டிலும் அமைதி நிலைநாட்டப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு நேர்மாறாக இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் தலைதூக்கி உள்ளனர். கடந்த 1962-ல் கியூபாவில் ரஷ்ய … Read more

இன்று முதல் மது விற்பனைக்கு தடை: திடீர் உத்தரவு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கீவ்-யை குறித்து வைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. மேலும், சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைபற்றியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. உக்ரைனின் ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது தாக்குதல் … Read more

கீவ்வில் இருந்து எல்லைக்கு செல்ல சிறப்பு ரெயில் இயக்கம்- இந்திய தூதரகம் அறிவிப்பு

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து பக்கத்து நாடுகளான ருமேனியா, அங்கேரிக்கு செல்கிறார்கள். அங்கிருந்து இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் இருந்து எல்லைப்பகுதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் அந்த ரெயிலில் மேற்கு பகுதியை நோக்கி செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. வார இறுதி நாட்களில் கீவ்வில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதையும் படியுங்கள்…துரத்தும் துரதிர்ஷ்டம்: … Read more

ரஷ்யா உடன் வர்த்தகம் தொடரும்: சீனா அறிவிப்பு| Dinamalar

பீஜிங் : உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடனான வழக்கமான வர்த்தகம் தொடரும் என சீனா அறிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக தன்னிச்சையாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை சீனா வன்மையாக கண்டிக்கிறது. ரஷ்யா உடன் பரஸ்பர மரியாதையையும் வழக்கமான வர்த்தகத்தையும் … Read more

‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  (UNGA)  அவசரக் கூட்டத்தில், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஐநாவின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில்  உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ராஜீய நிலையிலான பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று புது தில்லி உறுதியாக நம்புகிறது என்றார். ‘இயன்ற அனைத்தையும் செய்கிறோம்’ டிஎஸ் திருமூர்த்தி உக்ரைனில் … Read more

ஐ.நா. பொதுச்சபையின் அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? – இந்தியா விளக்கம்

ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. முன்னதாக, அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபை சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. வாக்கெடுப்பை புறக்கணிப்பது … Read more