"யூதர் குலத்து சிங்கம்".. சும்மாவா ஜெலன்ஸ்கியை தூக்கிப் பிடிக்குது அமெரிக்கா!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக அமெரிக்கா இத்தனை உறுதியாக நிற்க முக்கியக் காரணமே அவர் யூதர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான். உலகமெங்கும் உள்ள யூத இனத்தவர்களின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் விலாடிமிர் ஜெலன்ஸ்கி. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஐரோப்பாவில் யூதர்கள் சிந்திய ரத்தத்தின் கறையை இன்னும் கூட பார்க்கலாம். மாறாத வலி அது.. மறக்க முடியாத அடி அது. ஹிட்லர் என்ற ஒற்றை நாகத்தின் கொடுக்குகளில் சிக்கி, துடி துடித்து சிதறி ஓடிய இனம்தான் யூத இனம். … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக லட்வியர்கள் போர் செய்ய செல்லலாம் என அறிவிப்பு <!– உக்ரைனுக்கு ஆதரவாக லட்வியர்கள் போர் செய்ய செல்லலாம் என அற… –>

உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் அந்நாட்டிற்கு சென்று ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிய செல்லலாம் என லட்வியா அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் லட்வியா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களில் யார் வேண்டுமானாலும் போர் செய்ய செல்லலாம் என்றும் லட்வியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். Source link

இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் வரலாம்- தூதர் தகவல்

வர்சா: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் … Read more

ரஷ்யாவின் வங்கி சேவைகளை முடக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ‘ஸ்விவ்ட்’ எனப்படும், சர்வதேச வங்கி சேவை ஒத்துழைப்பு முறையில் இருந்து ரஷ்ய வங்கிகளை நீக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன. 11 ஆயிரம் வங்கிகள்’ஸ்விவ்ட்’ எனப்படும் உலகளாவிய வங்கிகள் இடையேயான நிதி தகவல் தொடர்பு சொசைட்டி வாயிலாக, உலகில் உள்ள வங்கிகள் இடையே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த, 11 ஆயிரம் வங்கிகள் இடம்பெற்றுள்ளன. இதன் வாயிலாக, ஒரு நாட்டில் இருந்து … Read more

உக்ரைனின் போர் சின்னமான செயின்ட் ஜாவ்லின்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உக்ரைனின் சின்னமாக செயின்ட் ஜாவ்லின் போற்றப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள வேளையில் தற்போது செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜாவ்லின் எனப்படும் ஏவுகணையைச் செலுத்தும் கருவியுடன் ஒரு பெண் துறவி காணப்படுவதுதான் செயின்ட் ஜாவ்லின் புகைப்படமாகும். ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேளையில், செயின்ட் ஜாவ்லின்தான் உக்ரைனின் மீட்பராகப் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. … Read more

போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!

ரஷ்யப் படையினருடன் சண்டையிட விரும்பும் கைதிகளை விடுதலை செய்து வருகிறது உக்ரைன் . ரஷ்யப் படையினரின் தாக்குதலை விதம் விதமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது உக்ரைன். அந்த நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆயுத உதவிகளைச் செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பலவீனப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யப் படையினருக்கு எதிராக கைதிகளையும் போரில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளது உக்ரைன். ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கைதிகளை கையில் எடுத்துள்ளது உக்ரைன். அதன்படி … Read more

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீனா கண்டனம் <!– ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீ… –>

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் ஒருதலைபட்சமானது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் சீனா … Read more

நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர் – ரஷிய படைக்கு எதிராக போரிடும் உக்ரைன் மக்கள்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி உள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை … Read more

கீவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறலாம்: ரஷ்ய ராணுவம்| Dinamalar

கீவ்: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (பிப்.,28) நடைபெற உள்ள … Read more

உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more