ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் தொடரும் வெள்ளை அங்கி போராட்டம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்து – 10 பேர் பலி <!– சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்… –>

சோமாலியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டதில் அதில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.  ஜூபாலண்ட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான kismayo-வை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதாக அம்மாகாண ராணுவ கமாண்டர் ஏடன் தெரிவித்துள்ளார். Source link

கரோனா தொற்றால் பிரிட்டன் சுகாதார கட்டமைப்பு செயலிழப்பு?- உதவிக்கு ராணுவம் அழைப்பு

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் … Read more

குலுங்கிய வீடுகள்: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் குவிங்ஹாய் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸின்யிங் நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சீன … Read more

பி.எம்.டபிள்யூ. மின்சார கார் விளம்பரத்தில் கிரேக்க கடவுள் ஜீயஸாக "அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்" <!– பி.எம்.டபிள்யூ. மின்சார கார் விளம்பரத்தில் கிரேக்க கடவுள்… –>

BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் ஜீயஸாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் மின்சார கார் விற்பனையை BMW தொடங்கியது. ஐ சீரிஸில் வெளியாகும் மின்சார கார்களின் புதிய விளம்பரத்தின் டீஸரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கிரேக்க கடவுளான ஜீயஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்னால்ட், ஜீயஸ் என்ற பெயரை தவறாக உச்சரிக்கும் coffee விற்பனையாளரை முறைத்தபடியே சரியான உச்சரிப்பை தெரிவித்து விட்டு செல்கிறார். வரும் … Read more

சீன ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்- அமெரிக்கா

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம். சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் … Read more

Virtual Avatar உலகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாததாக மாற்றிய Meta

புதுடெல்லி: Meta தனது மெய்நிகர் அவதாரங்கள் தொடர்பான அம்சத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் உங்கள் அவதாரத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையில் சுமார் நான்கு அடி தூரம் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது தேவையற்ற தொடர்புகளைத் தவிர்க்க உதவும். மெய்நிகர் அவதாரங்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மக்களிடமிருந்து Metaverseக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதை அடுத்து நிறுவனம் இந்த மாற்றத்தை செய்திருக்கிறது.  நினா ஜேன் படேல் என்பவர் மெய்நிகர் உலகில் (virtual … Read more

ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படை: ஐஎஸ் அச்சுறுத்தலால் தலிபான் முடிவு

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படையை இணைக்க தலிபான் அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும் பல மாற்றங்களை தலிபான்கள் செய்துவருகின்றனர். அந்த வகையில், ஆப்கன் ராணுவ நிர்வாகத்தில் தற்போது முக்கிய முடிவை … Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! <!– பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீனத் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. 91 நாடுகளைச் சேர்ந்த 2,875 வீரர்-வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்தார். புதின், இம்ரான்கான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண விளக்குகள் … Read more

எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. மேலும் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை தாக்கினால் கடும் … Read more