ஐ.நா., வில் இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்-‘மத வன்முறைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. நேற்று சர்வதேச மனித சகோதரத்துவ நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.,வில் நடந்த கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:தற்போது மதங்களுக்கு எதிராக புதிய அச்சம் தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக ஹிந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களை ஐ.நா., கவனத்தில் கொள்ள … Read more

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் சாலை…

வாஷிங்டன், உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், சாலைகளுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளுவரின் சிறப்பு என்பது தேசங்களை கடந்து பரவி இருக்கிறது என்பதற்கு சான்றாக, தற்போது  அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் … Read more

அமெரிக்காவில் காந்தி சிலை மீது தாக்குதல்.. இந்தியா கண்டனம்!

அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூ யார்க்கில் மான்ஹாட்டனில் உள்ள யூனியன் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி உயர சிலை இருக்கிறது. இந்த சிலை நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டங்களை தெரிவிப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்திய … Read more

காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்கு பலத்த கண்டனம் <!– காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்… –>

இலங்கையில் காட்டு யானை ஒன்றை துன்புறுத்தும் டிக் டாக் பதிவாளரின் வீடியோ படக்காட்சி வைரலாகப் பரவி வருகிறது. இது நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பூர்ணா செனவிரதனே என்ற பெயரில் உள்ள பதிவாளர் தனித்த சாலையில் காரில் போகும் போது ஒரு காட்டு யானையை கண்டு தமது காரால் யானைய மிரட்டி பின்வாங்க வைக்கும் காட்சியைப் பதிவு செய்துள்ளார். விலங்குகள் நல அமைப்புகள் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்   Source link

புவி வெப்பமயமாதலால் உருகும் எவரெஸ்ட் சிகரம்;- ஆய்வு தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காட்மண்டு: புவி வெப்பமயமாதலால் எவரஸ்ட் சிகரம் உருகி வருவதாக ஆய்வு தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலகின் உயரிய சிகரங்களில் உயரம் குறைந்து வருவதும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.முன்னதாக அண்டார்டிகாவில் ராட்சத மலை ஒன்று இரண்டாகப் பிளந்து தனியாக கடல் பரப்பின்மீது மிதந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது நேபாளத்தில் உள்ள உலகின் உயரமான … Read more

பேஸ்புக் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் சரிவு

சான் பிரான்சிஸ்கோ, சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதால், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என சில மாதங்களுக்கௌ முன்பு மாற்றம் செய்தது. இந்நிலையில் வியாழன் காலை மெட்டாவின் பங்குகள் 26 சதவிகிதம் சரிந்தன, இது இந்த நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரியது வீழ்ச்சியாகும். நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த காலாண்டில் மெட்டாவின் பயனர் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த திடீர் … Read more

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் தொடரும் வெள்ளை அங்கி போராட்டம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்து – 10 பேர் பலி <!– சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்… –>

சோமாலியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டதில் அதில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.  ஜூபாலண்ட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான kismayo-வை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதாக அம்மாகாண ராணுவ கமாண்டர் ஏடன் தெரிவித்துள்ளார். Source link

கரோனா தொற்றால் பிரிட்டன் சுகாதார கட்டமைப்பு செயலிழப்பு?- உதவிக்கு ராணுவம் அழைப்பு

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் … Read more

குலுங்கிய வீடுகள்: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் குவிங்ஹாய் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸின்யிங் நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சீன … Read more