Price Of Earth: பூமியின் விலை என்ன? கண்டறிய சிறப்பு forumula!

புதுடெல்லி: விலை நிர்ணயம் என்பது பொருட்களுக்கு மட்டுமே, இயற்கைக்கு விலை நிர்ணயிக்க முடியுமா? முடியவே முடியாது என்ற நினைப்பை மாற்றுகிறது இந்த செய்தி… விலை மதிக்க முடியாத பூமிக்கு பண மதிப்பிட்டால் அது என்னவாக இருக்கும்? ஒரு சிறப்பு சூத்திரத்தின் மூலம், அறிவியல் பேராசிரியர் பூமியின் விலையைக் கணித்துவிட்டார்.  நாம் வாழும் வீட்டின் விலையை தெரிந்து வைத்திருக்கிறோம். அதேபோல நாம் வாழும் பூமி கிரகத்தை எவ்வளவு விலைக்கு வாங்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக … Read more

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரான்ஸ் எம்.பி. கரோனா தொற்றால் மரணம்

பிரான்ஸில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நாடாளுமன்ற எம்.பி. ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸில், கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படுவது சந்தேகத்துக்குரியது என்று தடுப்பூசிக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்டு (வலசாரி கட்சியைச் சேர்ந்தவர்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76. மறைந்த ஜோஸ் எவ்ரார்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இரங்கல் … Read more

அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண்டியது <!– அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண… –>

அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு புது உச்சமாக 9 லட்சத்தை தாண்டியது. அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்து 600 தொற்றுக்கு உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த ஜனவரியை காட்டிலும் தற்போது குறைந்து வருவதாகவும் இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 64 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   Source … Read more

உக்ரைன் பதற்றத்துக்கு மத்தியில் புதின்-ஜின்பிங் நேரில் சந்திப்பு

பீஜிங் : ரஷியா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் தற்போது உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சம் படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்துள்ளது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று ரஷியா மறுத்து வருகிறது. ஆனாலும் அதை நம்பாத அமெரிக்கா … Read more

அமெரிக்க பஸ்சில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; நான்கு பேர் காயம்| Dinamalar

ஓரோவில்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 43 வயது பெண் உயிரிழந்தார்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கிரேஹோண்ட் என்ற இடத்தில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற பஸ், ஓரோவில் அருகே வந்தது. அப்போது, 21 வயது இளைஞர் ஒருவர், பயணியர் மீது திடீரென சுடத் துவங்கினார். இதில், 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார்; கர்ப்பிணி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த … Read more

ஒமைக்ரானைத் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

நிக்கோஸியா: மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் 3வது அலை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரான் … Read more

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு

நாஸ்கா: பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.  தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.  விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக … Read more

இந்திய ராணுவ தளபதி சொல்வது சரியல்ல:பாக்.,| Dinamalar

இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோட்டில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இந்தியா – பாக்., இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இது குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறும்போது, ”இந்தியா வலிமையாக உள்ள காரணத்தால் நம் கொள்கைப்படி போர் நிறுத்தப் பேச்சு நடத்தப்பட்டு வெற்றிகரமாக அமலில் உள்ளது,” என்றார்.இதை மறுத்து பாக்., ராணுவ … Read more

பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவர் கைது

லாகூர்,  பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட  ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  லாகூரில் இருந்து  300 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான் சன்னு, கனேவல் பகுதியில் , வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் சிலர் நடமாடுவது தெரியவந்தது.  இதையடுத்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு … Read more