பாகிஸ்தானில் ஹீலர் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அடித்துக் கொண்ட கர்ப்பிணி| Dinamalar

பெஷாவர்: ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான பாகிஸ்தானிய கர்ப்பிணி பெண் ஒருவர் மாய, மந்திரங்களை பயிற்சி செய்யும் ஹீலர் ஒருவரின் பேச்சை கேட்டு, ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் நெற்றியில் ஆணி அடித்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வழிபாடுகள் மாய மந்திரங்கள் மூலமாக நோயை குணப்படுத்தும் ஹீலர் உள்ளனர். அறிவியலை நம்ப மறுக்கும் ஒரு கூட்டம் இதுபோன்ற பேர்வழிகளின் பேச்சை உடனே நம்பிவிடுகின்றது. அந்த … Read more

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலர்

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை போலீஸார் தேடி வருகின்றனர். பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் வந்தார். அவர் தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு … Read more

செக்ஸ் இணையதளங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு வருகிறது செம செக்!

எப்போது பார்த்தாலும் ஸ்மார்ட்ஃபோனும், கையுமாக திரிந்து கொண்டிருக்கும் இன்றைய இளம் தலைமுறையை கெடுப்பதில் ஆபாச இணையதளங்கள் முதலிடம் வகிக்கின்றன என்று சொல்லலாம். அந்த அளவுக்கு செல்ஃபோனை தட்டினால் நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இவற்றில் வரும் பலான படங்களை இரவு தூக்கம் தொலைத்து கண்விழித்து விடியி விடிய பார்க்கும் சிறுவர்களின் உடல் மற்றும் மனநலம் கெடுவதுடன், படிப்பும் கெட்டு, அவர்களின் எதிர்காலமே கெடும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே உலகின் பல்வேறு நாடுகள், ஆபாச … Read more

கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு <!– கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் பகுதியில் வெளுத்து வாங்கிய க… –>

கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் (Dosquebradas) பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியதன் எதிரொலியாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை விவரிக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதுடன், 35 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள Otun ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஃபி பயிர் அதிகம் விளையும் இந்த … Read more

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக வெளியேற்றம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் வழக்கறிஞராக உள்ளார். இவர், வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக தனியாகவோ அல்லது கமலா ஹாரீஸ் உடனோ அடிக்கடி பயணம் செய்வார். இந்நிலையில், டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அங்கு, திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியா, எம்ஹாஃப் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் … Read more

பள்ளி நிதியில் ரூ.6.23 கோடியை சூதாட்டத்திற்காக சுருட்டிய கன்னியாஸ்திரி| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தோலிக்க பள்ளியின் நன்கொடை பணத்தில் இருந்து ரூ.6.23 கோடி திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த மேரி மார்கரெட் க்ரூப்பர் (வயது 80) என்ற கன்னியாஸ்திரி, செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் 10 ஆண்டுகாலம் முதல்வராக இருந்துள்ளார். அப்போது தான் 8,35,000 டாலர் (ரூ.6.23 கோடி) திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய பணத்தை அந்த கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், கோடையில் சுற்றுலாப் பயணிகள் கூடிவரும் லேக் தஹோ ரிசார்ட்டுகளுக்கு செல்வதற்கும் மற்றும் குளிர்காலத்தில் … Read more

ஓமிக்ரான் BA.2 துணைவகை உலகம் முழுதும் பரவும்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8, 2022) உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டிய நிலையில், உலக சுகாதார அமைப்பு, ஓமிக்ரானின் துணை வகையான பிஏ.2 (BA.2) உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. தற்போது ஆதிக்கம் செலுத்தும் பிஏ.1 பதிப்பை விட பிஏ.2 துணை மாறுபாடு மிகவும் பொதுவானதாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணியின் மரியா வான் கெர்கோவ் கூறினார். “பிஏ.2 ஆனது பிஏ.1 … Read more

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவேசம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ருடோ பேசும்போது, ”கரோனா பெருந்தொற்றால் அனைவரும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். கரோனா தடுப்பூசிக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, கனடா வாழ் மக்களின் அன்றாட வேலையை பாதிக்கிறது, நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. … Read more

'கொரோனா அடுத்த திரிபு மிகவும் ஆபத்தானது!' – WHO எச்சரிக்கை!

ஒமைக்ரானுக்கு அடுத்ததாக வரும் கொரோனா திரிபுகள் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவிய கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி … Read more

பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் போப்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாடிகன்: சிறார் பாலியல் தொல்லை விவகாரத்தில் முன்னாள் போப் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலய தலைமையத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு தேவாலயத்தில் இருந்த பாதிரியார்கள் சிலரால் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக முன்னதாக செய்தி வெளியானது. இது பெரும் கண்டனத்தை பெற்றது. உலகம் முழுக்க சமூகவலைதளத்தில் முனீச் கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் மீது சர்ச்சை எழுந்தது. … Read more