உதடுகளில் புன்னகை.. கையிலோ மனைவியின் "தலை".. மொத்த நாடும் ஸ்தம்பிச்சுப் போச்சு!

ஈரான் நாட்டில் தனது மனைவியைக் கொலை செய்து தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு கணவர் சாலையில் நடந்து சென்ற காட்சி ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டின் நாடாளுமன்றம் வரை போய் விட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோனா ஹைதரி. 17 வயதுதான் இவருக்கு. இவரை இவரது கணவரும், மைத்துனரும் சேர்ந்து தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஆவாஸ் என்ற நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. … Read more

சீனா பெய்ஸ் நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா – முழு ஊரடங்கு அமல் <!– சீனா பெய்ஸ் நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா – முழு ஊர… –>

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, சீனாவின் பெய்ஸ் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பொது போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா பூஜ்ஜிய கோவிட் அணுகுமுறையை பின்பற்றி வரும் நிலையில், நேற்றைய தினம் பெய்ஸ் நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் சுமார் 42 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக அன்று இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுகத்தில் 65 படகுகள் ஏலம் விடப்பட்டன. நேற்று காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் … Read more

பாக்., மீது இந்தியா தாக்கு| Dinamalar

நியூயார்க்: அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத குழுக்கள், ஐ.நா.,வின் தடைக்கு அஞ்சி மனிதநேய அமைப்புகள் போல உருமாறி செயல்பட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பொருளாதார தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: ஐ.நா., விதிக்கும் பொருளாதார தடைகள் ஒரு நாட்டில் சட்டப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தடுப்பதாக இருக்கக் கூடாது.அதேசமயம், பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு மனிதநேய அடிப்படையில் சலுகைகள் வழங்கும்போது … Read more

Internet safety: ஆபாச தள கண்காணிப்பிற்கு இனி கிரெடிட் கார்டு விவரங்கள் உதவும்

லண்டன்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆபாச தளங்களை (Porn Website) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் சிறார்களை உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தாலும், அது போதுமானதாக இல்லை.  இந்த சூழ்நிலையில், எந்த வயதினர் இந்த தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது.  எனவே இங்கிலாந்து அரசு புதிய ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை (Online Safety Bill) அறிவித்துள்ளது. இதன்படி, ஆபாசப் படங்களை வழங்கும் இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும். … Read more

Hijab Row: பெண்களை பள்ளிக்கு போக விடாமல் தடுப்பது.. பயங்கரமானது.. மலாலா கருத்து

பெண்களை பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது, அவர்களது படிப்பை தடுப்பது மிகவும் பயங்கரமானது என்று மலாலா யூசுபசாய் கூறியுள்ளார். கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்துத்தவா மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களை முற்றுகையிடுவது, வெறித்தனமாக கூச்சலிடுவது என்று பயமுறுத்தி வருகின்றனர். ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காவிக் கொடியை ஏற்றிய செயல் … Read more

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: 'WHO' எச்சரிக்கை

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:- கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் … Read more

ஐ.எஸ்., – கொராசன் தலைவர் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.75 கோடி

வாஷிங்டன்: ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சனாவுல்லா கபாரி குறித்து ரகசிய தகவல் தருவோருக்கு, 75 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல். இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில், 2021 ஆக., 26ல் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட, 185 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட … Read more

Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்

உக்ரைன் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில், பால்டிக் நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தடுப்பாக மற்ற நேட்டோ துருப்புக்களின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளன. அமெரிக்காவிடம்  THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்புக்கான கோரிக்கையை உக்ரைன் முன்வைத்துள்ளது. உக்ரைன் பிரதேசத்தில் கார்கோவ் அருகே ஏவுகணைகளை நிலைநிறுத்த உக்ரைன் விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் THAAD க்கான கோரிக்கையை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது.  2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததைத் தொடர்ந்து, நேட்டோ, போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கு பன்னாட்டு பட்டாலியன்களின் “மேம்படுத்தப்பட்ட முன்னோக்கி இருப்பை” … Read more

ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் உயிரிழப்புகள் பதிவு: உலக சுகாதார நிறுவனம் கவலை

ஜெனீவா: ஒமைக்ரான் பரவலுக்குப் பின் உலகம் முழுவதும் அரை மில்லியன் அதாவது 5 லட்சம் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. நிலைமை இப்படியிருக்க ஒமைக்ரானை மிதமானது என்று எப்படிக் கூற முடியும் என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். அந்த அமைப்பின், பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி முகமது கூறுகையில், “கடந்த நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. … Read more