ரஷியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கொரோனா

மாஸ்கோ : ஒமைக்ரான் தாக்கத்தால் ரஷியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று உறுதி … Read more

Oldest Pub Closed: 1000 ஆண்டுகள் பழமையான பப் மூடப்பட்டது! காரணம் இதுதான்…

லண்டன்: கொரோனா பாதிப்பால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பிரிட்டனின் மிகவும் பழமையான பப்பையும் கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. பொருளாதார சவால்கள் காரணமாக ஆயிரம் ஆண்டு பழமையான பப் மூடப்பட்டதாக  அதன் உரிமையாளர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, பிரிட்டனின் பழமையான பப் பூட்டப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக அனைவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்கின்றனர். நிதி பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை, கொரோனாவின் தாக்கத்தின் ஆயிரக்கணக்கான சீரழிவுகளில் ஒன்றாகும்.  லண்டனின் வடக்கே … Read more

அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கிய செல்லப்பிராணி பத்திரமாக மீட்பு <!– அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் ச… –>

அமெரிக்காவின் coloroda மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த காரில் புகை மூட்டத்தில் சிக்கி தவித்த நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. Douglas County யில் அமைந்துள்ள சாலை ஒன்றில் கார் ஒன்று கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து காரின் உரிமையாளர் உடனடியாக இறங்கி விட்ட நிலையில் காரில் இருக்கும் தன்னுடைய செல்லப்பிராணியை காப்பாற்றும்படி கதறினார். அப்போது அந்த வழியாக வந்த துணை ஷெரீப் உடனடியாக விரைந்து சென்று காரின் கண்ணாடிகளை தடியால் உடைத்து நாயைப் … Read more

தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய டிரக் டிரைவர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் சிறார்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வழி என பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு … Read more

குடியேற்ற முகாமில் 56 இந்திய மீனவர்கள்| Dinamalar

கொழும்பு : இலங்கையில், நீதிமன்றம் விடுவித்த இந்திய மீனவர்கள், 56 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததை அடுத்து, கொழும்பு குடியேற்ற முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிச.,ல் இந்திய மீனவர்கள், 56 பேர் இலங்கை மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்; அவர்களின், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த ஜன., … Read more

கனடா தலைநகர் ஒட்டவாவில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை <!– கனடா தலைநகர் ஒட்டவாவில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களின்… –>

கனடா தலைநகர் ஒட்டவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். இதையடுத்து தலைநகருக்கு ஒட்டவாவில் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கைகளுக்கு விலங்கு பூட்டுவது போல் அடுத்த 10 நாட்களுக்கு ஹாரன்களை ஒலிக்க தடை … Read more

சூதாட்டத்தில் மோகம்-பள்ளி நிதியில் இருந்து ரூ.5 கோடியை சுருட்டிய கன்னியாஸ்திரி

அமெரிக்காவை சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (80). இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். சுமார் அறுபது ஆண்டு காலமாக தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்த க்ரூப்பர் சூதாட்டத்தில் அடிமையாகியதாக தெரிகிறது. சூதாட்டம் விளையாட அதிகளவில் பணம் தேவைப்பட்டதால், பள்ளி நிதியில் கைவைக்க க்ரூப்பர் முடிவு செய்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு செலுத்தப்படும் கல்விக் கட்டணம், நன்கொடைகள் உள்ளிட்டவையை க்ரூப்பர் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் … Read more

சர்வதேச தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்| Dinamalar

வாஷிங்டன் : உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்துகிறது. கருத்துக் கணிப்புஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், … Read more

நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு <!– நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் … –>

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.  ஹவாலா பணம் உள்ளிட்டவைகள் மூலம் இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது, மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கனடாவில் வலுக்கும் போராட்டம்; தலைநகரில் அவசர நிலை பிரகடனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரோன்டோ : கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதால், கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா வைரசால், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 35ஆயிரத்தை நெருங்குகிறது.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரி டிரைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு, ‘டோஸ்’களை … Read more