சறுக்கலில் முடிந்த சாகசம்: உறைந்த ஏரியில் நூலிழையில் உயிர் தப்பிய தடகள வீரர் …!

பிராடிஸ்லாவா, 31 வயதான தடகள வீரர் போரிஸ் ஓரவேவ் பால் ஹாக்கியில் நான்கு முறை உலக சாம்பியன், ரெட் புல் ஐஸ் கிராஸ் தடகள வீரர் மற்றும் கிராஸ்-ஃபிட் விளையாட்டு வீரர். இவர் தனது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் தனது குளிர்ந்த நீர் நீச்சல் திறமையைக் காட்ட முயற்சித்தது பார்வையாளர்களை பதற்றமடைய செய்துள்ளது. போரிஸ் ஓரவேவ் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும் போது வழி திரும்பி திசை … Read more

இஸ்ரேலிலும் பெகாசஸ் சர்ச்சை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முடிவு

ஜெருசலம்: இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம்  இந்தியா உள்பட பல நாடுகளின்  அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும்  தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பெகாசஸ் மூலம் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் போலீசார் சட்டவிரோதமாக ஆய்வு செய்ததாக அந்நாட்டு வணிக நாளிதழ் கால்கலிஸ்ட் தெரிவித்துள்ளது.  முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு,  சமூக ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள், வணிகர்கள் உள்பட … Read more

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!

ஒட்டாவா, கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.  அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் … Read more

மடகாஸ்கர் தீவை புயல் தாக்கியது – 20 பேர் உயிரிழப்பு

அன்டனானரிவோ: இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கில் கடும் புயல் தாக்கியது கனமழை மற்றும் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால்  தீவின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பிரதான சாலை பகுதி பாதிக்கப்பட்டது. மேலும் 20 சாலைகள் மற்றும் 17 பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.கிழக்கு பகுதி நகரமான … Read more

தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஏலம் – இலங்கை கடற்படை

கொழும்பு, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் … Read more

பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

தென் அமெரிக்கான நாடுகளில் ஒன்றான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (63) கடந்த 1 ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் 2016 இல் புகார் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை பின்டோ திட்டவட்டாக மறுத்து வந்தார். இதனிடையே, நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக பெரு நாட்டு அதிபர் பெட்ரோ … Read more

ஆஸ்திரேலியாவில் வரும் 21-ம் தேதி முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மெல்போர்ன், கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது தொற்று பரவலாக குறைந்து வருவதால், வரும் 21-ம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற  வரும் 21-ம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Kohinoor Diamond: ராணி எலிபெத்திற்கு பிறகு கோஹினூர் வைரம் யாரிடம் செல்லும்?

உலகின் பல விதமான வைரங்கள் உள்ளன. ஆனால் இந்த வைரங்களிலேயே மிகச்சிறந்த வைரம் கோஹினூர் வைரம் தான். உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரமான கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது. ஆனால் இந்த வைரம் தற்போது இந்தியாவில் இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் உள்ள தற்போது எலிசெபத் ராணியின் கிரிடத்தில் இந்த வைரம் இருக்கிறது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகள் செய்தும் … Read more

பொருளாதார நெருக்கடி… இந்தியா விரைந்த இலங்கை அமைச்சர்!

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகளிடம் அந்நாடு பொருளாதார உதவி கோரி வருகிறது. இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கைக்கு கடனாக 3,730 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா … Read more

சைகையை மீறி வேகமாக வந்த கார்.. சிறுமியை தள்ளிவிட்டு காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலர்.. குவியும் பாராட்டு.. <!– சைகையை மீறி வேகமாக வந்த கார்.. சிறுமியை தள்ளிவிட்டு காரில… –>

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார், சாலையைக் கடந்து வந்த பள்ளிச்சிறுமி மீது மோத இருந்த நிலையில் அவளை தள்ளி விட்டு, காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 4-ம் தேதியன்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெண் காவலர், cecil கவுண்டி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையின் ஒரு புறத்தில் வந்த வாகனங்களை … Read more