அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், … Read more

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல கிராமங்களில் நிலச்சரிவு.! <!– ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல … –>

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால், பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில், சேற்றில் சிக்கிய வாகனங்களை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர். மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. Source link

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல்

லாகூர்: இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.! <!– ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமா… –>

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் புதர்தீயை அணைக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெர்த் நகர் அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதர்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் அங்கு உச்சகட்ட அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். வீட்டில் பற்றிய நெருப்பை அணைக்க முயன்ற நபர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்

கார்கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் பேரழிவை சந்திக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த … Read more

பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் இருந்த போது, பிரதமா் இல்லத்தின் விதிமீறல்கள் குறித்த சர்ச்சைகள் வெளியான நிலையில், அரசின் உயா் அதிகாரிகள் 4 போ் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனா். இது, பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது தொடா்பாக அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.  அதில், கொரோனா பரவலை ( Corona Virus) கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்த சூழலில், … Read more

பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, … Read more

அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49 வயது அமெரிக்க வீரர் முதலிடம் <!– அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49… –>

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிய கெல்லி ஸ்லேட்டர் 49 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார். 1992ம் ஆண்டு, 20 வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மிகவும் இளம் வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்லேட்டர், அலைசறுக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வயதான வீரர் என்ற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். 5 நாட்களில் 50வது பிறந்த நாளை கொண்டாட உள்ள … Read more

சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் தீவிர ஆலோசனை!

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த வாரம் பாராளுமன்றம் இது குறித்து விவாதிக்கும் என்றும் அவர் கூறினார். 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதில் இருந்து, தனது எல்லைகளை மூடிய ஆஸ்திரேலியா, அதன் குடிமக்கள், புலம்பெயர்ந்தோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் சில பணியாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில், கடுமையான கட்டுபாடுகளை விதித்திருந்த … Read more

லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி

இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த … Read more