பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை: சீன பிரதமர் வாக்குறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : “சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்,” என, பாக்., பிரதமரிடம், சீன பிரதமர் லி கெக்கியாங் கூறினார். நம் அண்டை நாடான சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. துவக்க விழாவில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தலைநகர் பீஜிங்கிற்கு வந்தார். இதற்கிடையே சீன தலைவர்களையும், அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் சீன பிரதமரான லி கெக்கியாங்கை, நேற்று … Read more

இலங்கையில் தமிழக மீனவர்கள் படகுகள் ஏலம்.! <!– இலங்கையில் தமிழக மீனவர்கள் படகுகள் ஏலம்.! –>

இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் இன்று காலை 9 மணி முதல் ஏலம் விடப்படுகிறது இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் … Read more

பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பெரு நாட்டின் பிரதமர் ராஜினாமா

பியூனோஸ் அயர்ஸ் : தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மொரோக்கோ சிறுவன் மரணம்| Dinamalar

இக்ரேன் : மொரோக்கோவில் கடந்த 1ம் தேதியன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் இக்ரேன் என்ற இடத்தில், ரயான் ஓராம் என்ற, 5 வயது சிறுவன் கடந்த 1ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.கிணற்றின் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 100 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின், … Read more

WInter Olympics: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு? பகீர் புகார்

பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் உணவு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்’ என்று ரஷ்ய தடகள வீராங்கனை குற்றம் சாட்டுகிறார். தரம் குறைந்த உணவுக்காக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களை, ரஷ்ய தடகள வீராங்கனை கடுமையாக சாடியுள்ளார்.  விளையாட்டு தொடர்பான பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், பெய்ஜிங்கில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஐ நடத்தும் சீனா ஏற்கனவே … Read more

ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை <!– ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் … –>

ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் 3 பேரையும் சுட்டுக்கொன்றதாகவும் அவர்களிடம் இருந்து 36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு 180 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசியத தகவலில் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றதாக … Read more

அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை வீழ்த்தியது சோமாலியா ராணுவம்

மொகடிஷு: சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அல்-ஷபாப் அமைப்பு, பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக விளங்குகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், தெற்கு மாநிலமான ஜூபாலேண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 4 … Read more

கொரோனா ஊரடங்கில் விருந்து; ஒப்புக்கொண்ட அமைச்சர் ரிஷி

லண்டன்-கொரோனா ஊரடங்கின் போது நடந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றதாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2020ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குற்றச்சாட்டுஅப்போது ஜூன் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் வந்தது. இதற்காக லண்டனில் உள்ள எண்: 10, டவுனிங் தெரு என்ற முகவரியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில்,பிறந்த … Read more

US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

மாஸ்கோவுடனான உக்ரைன் மோதல்  வலுத்து வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு 3,000 கூடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஆனால்,  ரஷ்யாவுடன் போரைத் தொடங்குவதற்காக இந்த துருப்புக்களை அனுப்பவில்லை என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. “உக்ரேனில் போரைத் தொடங்கவோ அல்லது ரஷ்யாவுடன் போரிடவோ அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் பல மாதங்களாக தெளிவாகக் கூறி வருகிறார்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஃபாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். … Read more

லதா மங்கேஷ்கரின் இனிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்; ஹமீத் கர்சாய்

காபூல், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய … Read more