Video: பதவியேற்பு விழாவில் டிரம்பிற்கு தர்ம சங்கடம்… அவர் மனைவி செய்ததை பாருங்களேன்!

Donald Trump: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்பிற்கும், அவரது மனைவி மெலினா டிரம்பிற்கும் இடையே நடந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

காசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை … Read more

காலனித்துவ இந்தியாவில் இருந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்த இங்கிலாந்து

கடந்த 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளதாக உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியர் டாலர் லாபம் பார்த்துள்ளது. இந்த தொகையை கொண்டு பிரிட்டஷ் 50 பவுண்டு நோட்டுகள் மூலம் லண்டனில் கம்பளமாக விரித்தால் அந்த நகரை 4 முறை மூடலாம். … Read more

இனி அமெரிக்காவில் ஆண், பெண் மட்டுமே! முதல் நாளே டிரம்ப் அதிரடி! புதிய சட்டம் அமல்!

Donald Trump: அமெரிக்காவின் அதிபராக பதியேற்றுள்ள டிரம்ப் முதல் நாளிலேயே அதிரடி காட்டும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

“உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை … Read more

உக்ரைன் போருக்கு ஆட்கள் தேர்வு: 2 ரஷ்யர்கள் உட்பட 3 பேர் கைது

திருச்சூர்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருச்சூரின் தையூரை சேர்ந்த சிபி ஓசெப், எர்ணாகுளத்தை சேர்ந்த சந்தீப் தாமஸ், சாலக்குடியை சேர்ந்த சுமேஷ் ஆன்டனி ஆகிய 3 பேரை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது … Read more

ட்ரம்புடனான விருந்தில் காஞ்சிபுரம் பட்டு புடவை கட்டி வந்த நீதா அம்பானி!

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானியும் பங்கேற்கின்றனர். முன்னதாக, ட்ரம்ப் உடனான இரவு விருந்து நிகழ்வில் பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு புடவையை அணிந்து சென்றுள்ளார் நீதா அம்பானி. இந்திய பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி நெசவு செய்துள்ளார். விஷ்ணுவைக் குறிக்கும் வகையில் இருதலைபக்‌ஷி, மயில் மற்றும் … Read more

“அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” – அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் முதல் உரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். தனது முதல் உரையில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது: “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன். நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த … Read more

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த கொய்யாடா ரவிதேஜா (வயது 26) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு மேற்படிப்பிற்காக வாஷிங்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்த இவர், வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் உடலில் குண்டு காயங்களுடன் ரவிதேஜா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை யாரேனும் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிய வராத நிலையில், இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை … Read more