அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த கொய்யாடா ரவிதேஜா (வயது 26) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு மேற்படிப்பிற்காக வாஷிங்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்த இவர், வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் உடலில் குண்டு காயங்களுடன் ரவிதேஜா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை யாரேனும் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிய வராத நிலையில், இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை … Read more

வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில், அவர் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் திட்டம் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார். கொலை முயற்சியை கடந்து வந்த ட்ரம்ப், அதிபராக பதவியேற்க உள்ளார். கடும் குளிர் காரணமாக பதவியேற்பு விழா உள் அரங்கில் நடைபெறுகிறது. ஜே.டி.வான்ஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர்களது குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். பில் … Read more

அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த 'டிக்டாக்'

வாஷிங்டன், ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை … Read more

ஈரானில் பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை

தெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ (வயது 37). உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். இவர் ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து அடிக்கடி வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் … Read more

போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய … Read more

மக்கள் ‘நம்பும்’ நாடுகளின் பட்டியலில் ஓர் இடம் சரிந்து 3-ம் இடத்தில் இந்தியா!

டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஓர் இடம் பின்னடவைக் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நாடுகளை பல நிலைகளில் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும் எடில்மேன் என்ற அமைப்பு 2024-ம் ஆண்டுக்கான தனது 25-வது ஆண்டறிக்கையை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் சமர்ப்பித்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, சீனா, கனடா, பிரேசில் என 28 நாடுகளில், 32 … Read more

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.இதையடுத்து, அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் தொடங்கின.அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 … Read more

இந்தியாவின் 33.80 டிரில்லியன் டாலர் பணத்தை பிரித்துக்கொண்ட இங்கிலாந்தின் 10% பணக்காரர்கள்: ஆக்ஸ்பாம் அறிக்கை

டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில் 33.80 டிரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் 10% பணக்காரர்கள் பிரித்துக்கொண்டதாக ஆக்ஸ்பாம் எனும் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. அதில், இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் குறித்தும், அவை எவ்வாறு அந்நாட்டின் பெரும் … Read more