இந்தியாவின் 33.80 டிரில்லியன் டாலர் பணத்தை பிரித்துக்கொண்ட இங்கிலாந்தின் 10% பணக்காரர்கள்: ஆக்ஸ்பாம் அறிக்கை

டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில் 33.80 டிரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் 10% பணக்காரர்கள் பிரித்துக்கொண்டதாக ஆக்ஸ்பாம் எனும் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. அதில், இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் குறித்தும், அவை எவ்வாறு அந்நாட்டின் பெரும் … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 3 பிணைக் கைதிகள், 90 பாலஸ்தீனர்கள் விடுவிப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்பாக்கி தாக்குதல்கள் இல்லாமல் காசா மக்கள் கழித்தனர். குறிப்பாக மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 டிரக்குகள் காசாவுக்குள் சென்றன. இவற்றில் 300 டிரக்குகள் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு காசாவுக்குள் சென்றன. முன்னதாக, இஸ்ரேல் – … Read more

ட்ரம்புடன் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானியும் நிகழ்த்திய சந்திப்பு கவனம் பெறுகிறது. ட்ரம்புடன் அம்பானி தம்பதி எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் … Read more

ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர்

அனிமேஷன் கதாபாத்திரங்களின் உண்மையான பிரியர் என்றால் ஷின்-சான் பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. சிறுவர்களின் மிக பிரியமான இந்த கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஷின்-சானின் பிரியர்கள் எவரும் சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) சின்னமான வீட்டை எப்போதும் நினைவில் வைத்திருப்பர். ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் தற்போது அந்த வீட்டை ரூ.3.5 கோடி செலவில் புதுப்பித்துள்ளது சீனா மட்டுமின்றி உலகம் … Read more

அரிதான சிறுநீரக நோய்க்கான அறிகுறியை கண்டறிந்து ஒருவரின் உயிரை காப்பாற்றிய சாட்ஜிபிடி

அரிதான சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிந்து ஒருவரின் உயிரை சாட் ஜிபிடி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த அதிசய சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரெட்டிட் சமூக வலைதளத்தில் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளதாவது: ஒரு வாரத்துக்கு முன்பாக நான் உடற்பயிற்சி செய்ய முடிவு செய்தேன். ஆனால் அதுவே ஆபத்தாக முடியும் என நான் நினைக்கவில்லை. சிறிய அளவில் உடற்பயிற்சிகளை செய்தபோது கடுமையான நீரிழப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கும் மேல் … Read more

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் … Read more

பணியில் இருப்பதாக நடிக்கும் சீன இளைஞர்கள்: தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகம் செல்கின்றனர்

சீனாவில் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சீன இளைஞர்கள் வேலையிழப்பை மறைத்து பணியில் இருப்பதாக நடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகங்களுக்கு செல்கின்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இதன்காரணமாக அந்தநாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் உற்பத்தி, கார் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை இன்று விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் … Read more

பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை

கெய்ரோ, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் … Read more