அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் … Read more

பணியில் இருப்பதாக நடிக்கும் சீன இளைஞர்கள்: தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகம் செல்கின்றனர்

சீனாவில் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சீன இளைஞர்கள் வேலையிழப்பை மறைத்து பணியில் இருப்பதாக நடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகங்களுக்கு செல்கின்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இதன்காரணமாக அந்தநாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் உற்பத்தி, கார் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை இன்று விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் … Read more

பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை

கெய்ரோ, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் … Read more

விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளில் 3 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்; காசாவில் போர் நிறுத்தம் அமல்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய … Read more

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது

வாஷிங்டன், ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை … Read more

3 மணி நேர தாமதத்துக்குப் பின் அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

டெல் அவிவ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கே அமலுக்கு வர வேண்டிய போர் நிறுத்தம் சில மணி நேரம் தாமதமானது. இதனால் கடைசி நேர பரபரப்பு கூடியது. திக் திக் நிமிடங்களைக் கடந்து தற்போது … Read more

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

நய்பிடாவ், மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 1.31 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.87 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மியான்மரில் கடந்த 3-ம் தேதி … Read more

அமெரிக்காவில் அமலுக்கு வந்தது டிக்டாக் தடை; இனி பிளே ஸ்டோரிலும் கிடைக்காது! 

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்ட புதிய தடைச்சட்டம் காரணமாக அமெரிக்கர்கள் ‘டிக் டாக்’ செயலியை இனி பயன்படுத்த முடியாது. ப்ளே ஸ்டோர், ஆஃப் ஸ்டோரில் இருந்தும் பிரபல வீடியோ ஷேரிங் அப் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 170 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்த செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், “மன்னிக்கவும். இனி டிக்டாக் செயலி கிடைக்காது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அதிபர் ட்ரம்ப் … Read more

அரசியல் எதிரிகளின் கொலை முயற்சியில் இருந்து நானும் சகோதரியும் 20 நிமிட இடைவெளியில் உயிர் தப்பினோம்: ஷேக் ஹசீனா

புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாகவும், 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்ததாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் போராட்டதால், அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் வங்கதேச நீதிமன்றம், ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. … Read more