உக்ரைன் அமைதிக்காக… டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பேச்சு – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

பாரீஸ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரானது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் … Read more

தைவான் ஜலசந்தியில் கனடா போர்க்கப்பல்: கண்டனம் தெரிவித்த சீனா

தைபே நகரம், தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததை நேற்று சீன இராணுவம் கண்டித்தது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் இதேபோன்ற பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் அந்த கப்பலை கண்காணித்து எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையும், எப்போதாவது கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களும், சர்வதேச நீர்வழியாகக் கருதும் இந்த ஜலசந்தியை மாதத்திற்கு ஒரு முறை கடந்து செல்கின்றன. தைவானும் இதை ஒரு சர்வதேச நீர்வழியாகக் … Read more

கனடாவில் தரையிறங்கிய விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம் – விபத்து நடந்தது எப்படி?

மிசிசாகா: கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமான நிலையத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 76 பயணிகள் மற்றும் நான்கு விமான பணியாளர்களுடன் மினியாபோலிஸிலிருந்து வந்த விமானம் அந்த நாட்டு நேரப்படி திங்கள்கிழமை … Read more

“உக்ரைன் பங்கேற்பு இல்லாத ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மாட்டோம்” – ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ்: உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதை அடுத்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்களின் சந்திப்பு நாளை (பிப்.18) சவூதி அரேபிய தலைநகரில் நடைபெற உள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான … Read more

84 வருட திருமண வாழ்க்கை-100 பேரக்குழந்தைகள்!! சாதனை புரிந்த தம்பதி-வைரல் செய்தி..

Couple Married For Over 84 Years Had Set Guinness World Record : ஒரு வயதான தம்பதி, 100 பேரக்குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டி ஆகி உலக சாதனை படைத்திருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்; 9 பேர் பலி

கென்டகி, அமெரிக்காவில் சக்தி வாய்ந்த குளிர்கால சூறாவளி தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் பலர் சிக்கி கொண்டனர். கென்டகியில் 8 பேர் உள்பட இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார். சூறாவளி … Read more

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

கான்பெரா, தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் … Read more

அமெரிக்காவில் கனமழை: மத்திய கிழக்கு மாகாணங்களில் வெள்ள பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களான கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக அங்கு வெள்ள பாதிப்பு எற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கின மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மிசிசிப்பி, ஓஹியோ ஆகிய அண்டை மாகாணங்களிலும் திடீா் வெள்ளம் … Read more

ஊழல் வழக்கில் மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது

போர்ட் லூயிஸ், இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது … Read more

பாகிஸ்தானில் இருவேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு – 45 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்த பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இருவேறு இடங்களில் நடந்த விபத்து சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே … Read more