ஊழல் வழக்கில் மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது

போர்ட் லூயிஸ், இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது … Read more

பாகிஸ்தானில் இருவேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு – 45 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்த பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இருவேறு இடங்களில் நடந்த விபத்து சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே … Read more

இந்தியாவுக்கு வழங்கிவந்த 21 மில்லியன் டாலர் நிதி நிறுத்தம்: மஸ்க் தலைமையிலான குழு அதிரடி

நியூயார்க்: கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கை கடந்த மாதம் தேர்வு செய்தார். நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் இதன் நோக்கம். அதன்படி (DOGE – The Department … Read more

80 கோடி மக்களுக்கு நாங்கள் உணவு அளிக்கிறோம்; அமெரிக்க செனட் உறுப்பினருக்கு மந்திரி ஜெய்சங்கர் பதில்

முனிச், ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் (இன்று வரை) நடந்த பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றி பேசப்படும். இதில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதேபோன்று, நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், அமெரிக்க செனட் உறுப்பினர் எலிஸ்ஸா ஸ்லாட்கின், வார்சா மேயர் ரபால் ஜாஸ்கோவ்ஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க செனட் உறுப்பினரான ஸ்லாட்கின் … Read more

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு- 70 பேர் பலி

கின்ஷாசா, மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, கிழக்கு பகுதியில் ருவாண்டா நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டின் கனிம வளங்கள் நிறைந்த சொர்க்கப்பூமியாக எல்லை பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட மாகாணங்கள் விளங்குகிறது. இதனால் அங்கு சுரங்கங்கள் தோண்டி காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகிறது. இந்தநிலையில் ருவான்டா நாட்டின் ஆதரவு கொண்ட எம்-23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு இந்த பகுதிகளை … Read more

பணய கைதிகள் விவகாரம்; இஸ்ரேல் முடிவுக்கு ஆதரவு என டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்த போரில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சூழலில், அமெரிக்கா, எகிப்து மற்றும் … Read more

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது – வாடிகன் தகவல்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட பரிசோதனைகளில் அவருக்கு சுவாசக்குழாய் … Read more

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு ரூ.69,000 கோடி வருவாய்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்திய மாணவர்களால் அமெரிக்காவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன” … Read more

அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு மாறாக செய்தி வெளியிடும் ஏபி நிருபர், புகைப்பட கலைஞருக்கு அனுமதி மறுப்பு

வாஷிங்டன்: சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு (ஐஎச்ஓ) கடல்கள் மற்றும் பெருங்கடல்களுக்கு பெயர் சூட்டுகிறது. ஏதாவது ஒரு கடல் பகுதியின் பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்து அவசியம். அதன் அடிப்படையில் மட்டுமே ஐஎச்ஓ அமைப்பு கடல் பகுதிகளின் பெயர்களை மாற்றும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக அமெரிக்க வளைகுடா என்று பெயரிட்டுள்ளார். இதை மெக்ஸிகோ அரசு ஏற்கவில்லை. இந்த சூழலில் சர்வதேச அளவில் ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்றும் அமெரிக்காவில் மட்டும் ‘அமெரிக்க வளைகுடா’ என்றும் சர்வதேச … Read more