அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு மாறாக செய்தி வெளியிடும் ஏபி நிருபர், புகைப்பட கலைஞருக்கு அனுமதி மறுப்பு

வாஷிங்டன்: சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு (ஐஎச்ஓ) கடல்கள் மற்றும் பெருங்கடல்களுக்கு பெயர் சூட்டுகிறது. ஏதாவது ஒரு கடல் பகுதியின் பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்து அவசியம். அதன் அடிப்படையில் மட்டுமே ஐஎச்ஓ அமைப்பு கடல் பகுதிகளின் பெயர்களை மாற்றும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக அமெரிக்க வளைகுடா என்று பெயரிட்டுள்ளார். இதை மெக்ஸிகோ அரசு ஏற்கவில்லை. இந்த சூழலில் சர்வதேச அளவில் ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்றும் அமெரிக்காவில் மட்டும் ‘அமெரிக்க வளைகுடா’ என்றும் சர்வதேச … Read more

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மூவரை விடுவித்தது ஹமாஸ் – பதிலுக்கு 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

டெல் அவிவ்: பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல் – ஹாமாஸ்கள் இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்தத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஹமாஸ், இன்று (சனிக்கிழமை) … Read more

நடுக்கடலில் திகில் சம்பவம்… வாலிபரை படகுடன் விழுங்கி, துப்பிய திமிங்கலம்; வைரலான வீடியோ

சான்டியாகோ, சிலி நாட்டின் தெற்கே பாடகோனியா மண்டலத்திற்கு உட்பட்ட மேகல்லன் ஜலசந்தி பகுதியில் டெல் சிமன்காஸ் (வயது 49) என்பவர், அவருடைய மகன் ஆத்ரியன் சிமன்காஸ் (வயது 24) என்பவருடன் படகில் சவாரி செய்துள்ளார். அவர்கள் இருவரும் தனித்தனியாக படகுகளில் சென்று, சாகச பயணம் மேற்கொண்டபோது, திகில் ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆத்ரியன் படகில் முன்னே செல்ல, டெல் அவரை மற்றொரு படகில் பின்னால் தொடர்ந்து சென்றிருக்கிறார். டெல், தூரத்தில் இருந்தபடி கடலின் அழகை வீடியோவாக … Read more

ட்ரம்ப் உத்தரவு அமல்: அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்ட பதிவில், “மூன்றாம் பாலினத்தவர் இனி ராணுவத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாலின … Read more

அமெரிக்க வெளியுறவு மந்திரி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு

வாஷிங்டன், அமெரிக்கா நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நாட்டின் வெளியுறவு மந்திரியாக மார்கோ ரூபியோ பதவியேற்றார். இந்தநிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பாக மார்கோ ரூபியோ கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி வாஷிங்டனில் உள்ள ராணுவ முகாம் விமான தளத்தில் இருந்து அவருடைய விமானம் புறப்பட்டது. அமெரிக்கா எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுவானில் அந்த விமானம் பறந்து … Read more

பணய கைதிகள் விவகாரம்; இன்று மதியம் என்ன நடக்க போகிறது…? டிரம்ப் பதில்

வாஷிங்டன் டி.சி., இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த … Read more

10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: மஸ்க் பரிந்துரையின்படி ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கினார் ட்ரம்ப்

வாஷிங்டன்: 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பிரிவுத் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார். அவரின் பரிந்துரையின்படியே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் … Read more

அடுத்த மாதம் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் விலோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ளனர். 8 நாள் பயண திட்டத்துடன் விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும் தற்போது வரை மீட்கப்படவில்லை. அவர்கள் இருவரையும் பூமிக்கு … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு, தங்கள் பணியிடத்துக்கு ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனம் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத … Read more